/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் 'ராமாயண' யாத்திரை
/
கோவையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் 'ராமாயண' யாத்திரை
கோவையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் 'ராமாயண' யாத்திரை
கோவையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் 'ராமாயண' யாத்திரை
ADDED : ஜூலை 10, 2025 10:06 PM
கோவை; கோவையிலிருந்து இலங்கைக்கு ராமாயண யாத்திரை எனும் விமானச் சுற்றுலாவை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வழங்குகிறது.ஐ.ஆர்.சி.டி.சி., பல்வேறு ஆன்மிகச் சுற்றுலாக்களை இயக்கி வருகிறது.
பாரத் கவுரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி கல்லூரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது.
ரயில் மூலம் மட்டுமின்றி, விமானம் மூலமாகவும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஸ்ரீலங்கா ராமாயண யாத்திரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இச்சுற்றுலா செப்., 24 ம் தேதி துவங்குகிறது. ஆறு இரவு, ஏழு பகல் அடங்கிய ஆன்மீகச் சுற்றுலாவை ஐ.ஆர்.சி.டி.சி., மீண்டும் அறிவித்துள்ளது.செப்., 23ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு, கேண்டி, நுவரெலியா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ராமாயண புராணத்தின் முக்கியத்துவம் பெற்ற கோவில்கள், சங்கரிதேவி, சக்தி பீடம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்படும்.
சுற்றுலாவில் விமான கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, ஏ.சி., போக்குவரத்து, உணவு, நுழைவு கட்டணம், சுற்றுலா வழிகாட்டி, பயணக் காப்பீடு, சாதாரண இலங்கை விசா, ஜி.எஸ்.டி., ஆகியவை உள்ளடங்கும். சுற்றுலா கட்டணமாக, 59 ஆயிரத்து, 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், www.irctctourism.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.