/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென் திருப்பதியில்ரதசப்தமி விழா
/
தென் திருப்பதியில்ரதசப்தமி விழா
ADDED : பிப் 16, 2024 11:31 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் ரதசப்தமி விழா அதிகாலை 2 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியது.
சூரிய பிரபை வாகனம், சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், அனுமந்த வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க மாட வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து முத்து பந்தல் வாகனம், கருட சேவை, சந்திர பிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.