/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு கார்டுதாரருக்கு ஒரு கிலோ கோதுமை கூட கிடைப்பதில்லை: ரேஷன் கார்டுதாரர்கள் புகார்

ADDED : நவ 11, 2025 10:58 PM

கோவை: ரேஷனில் ஒருகிலோ கோதுமைகூட கிடைப்பதில்லை என்று, ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1542 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 11.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், வினியோகம் செய்யப்படுகின்றன.
1500 கார்டுகள் உள்ள ரேஷன் கடைக்கு, 500 கிலோ கோதுமை மட்டும் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு கார்டுக்கு ஒரு கிலோ கோதுமை வழங்கினால், மீதம் உள்ள, 1000 கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ கூட கிடைப்பதில்லை என, ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவையை பொறுத்தவரை 8 சதவீதம் கோதுமை மட்டுமே கிடைக்கிறது. ஒரு கடைக்கு, 1000 கிலோ தேவை என்றால், 80 கிலோ தான் சப்ளை செய்ய முடிகிறது. முதலில் வரும் கார்டுதாரர்கள் வாங்கி செல்கின்றனர். எல்லா கார்டுதாரர்களுக்கு கோதுமை வழங்கும் அளவுக்கு, ஒதுக்கீடு கிடைக்கவில்லை' என்றனர்.