/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கியாச்சு: துணைப்பதிவாளர்
/
ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கியாச்சு: துணைப்பதிவாளர்
ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கியாச்சு: துணைப்பதிவாளர்
ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கியாச்சு: துணைப்பதிவாளர்
ADDED : அக் 23, 2024 05:27 AM
கோவை : ''தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது,'' என பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறினார்.
கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக, 11 லட்சம் கார்டுதாரர்கள் மாதம் தோறும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருகின்றனர். தீபாவளி பண்டிகை வருவதால், இந்த மாதத்துக்கான பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள், முழுமையாக வழங்க வேண்டும் என, ரேஷன்கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. கருமத்தப்பட்டி பகுதியில் உள்ள கடைகளுக்கு மட்டும், பருப்பு வழங்க வேண்டி உள்ளது. நாளை (இன்று) வழங்கி விடுவோம்,'' என்றார்.