/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை திறப்பு
/
20 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை திறப்பு
ADDED : ஜன 14, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, 86வது வார்டு, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில், பொள்ளாச்சி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சத்தில், 570 சதுரடியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு இருக்கிறது.
பொருட்கள் சேமிப்பு அறை, பொருட்கள் வினியோக அறை, கழிப்பறை, நடைபாதை கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த கடை நேற்று முதல் செயல்படத் துவங்கியது.

