/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
85 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் சப்ளை
/
85 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் சப்ளை
ADDED : ஆக 14, 2025 08:49 PM
கோவை; கோவையில் முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1211 வாகனங்களில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' துவங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கோவையில் 85 ஆயிரத்து 171 கார்டுதாரர்களுக்கு, 1211 வாகனங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி மற்றும் ஞாயிறு அன்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து கோவை மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
கோவையில் கூட்டுறவுத் துறை மூலம், 1487 ரேஷன் கடைகளில், 1191 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் பயனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க இருக்கிறோம். திட்டத்தின் மூலம் 85 ஆயிரத்து 171 ரேஷன் கார்டுதார்கள் பயன் பெற உள்னர். இந்த திட்டத்துக்கு என, 1211 வாகனங்கள் பயன்படுத்தப்படுத்த இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி மற்றும் ஞாயிறு அன்று இந்த திட்டதில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.