/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய்லாந்து நிறுவனத்துடன் ரத்தினம் கல்லுாரி ஒப்பந்தம்
/
தாய்லாந்து நிறுவனத்துடன் ரத்தினம் கல்லுாரி ஒப்பந்தம்
தாய்லாந்து நிறுவனத்துடன் ரத்தினம் கல்லுாரி ஒப்பந்தம்
தாய்லாந்து நிறுவனத்துடன் ரத்தினம் கல்லுாரி ஒப்பந்தம்
ADDED : ஜூன் 04, 2025 01:20 AM

கோவை, ; ரத்தினம் கல்வி நிறுவனங்கள், தாய்லாந்தின் புகழ்பெற்ற ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தில், ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுத் துறை இயக்குநர் பிரணேஷ் மற்றும் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் முதன்மை வணிக அதிகாரி நாகராஜ்ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன் வாயிலாக, பொறியியல் மற்றும் வணிகத் துறைகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்வி பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற முடியும்.
இந்த சர்வதேச ஒப்பந்தத்தால், மாணவர்களும் பேராசிரியர்களும் உலக தரப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகளையும் பெறவும், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என,முதன்மை வணிக அதிகாரி நாகராஜ் தெரிவித்தார்.