/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் மாணவர்களுக்கு ஆர்.பி.ஏ.பயிற்சி
/
ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் மாணவர்களுக்கு ஆர்.பி.ஏ.பயிற்சி
ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் மாணவர்களுக்கு ஆர்.பி.ஏ.பயிற்சி
ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் மாணவர்களுக்கு ஆர்.பி.ஏ.பயிற்சி
ADDED : ஆக 07, 2025 09:38 PM
கோவை; இன்போசிஸ் சி.எஸ்.ஆர்., செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஐ.சி.டி., அகடமியுடன் இணைந்து ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில், 18 நாட்கள் ஆர்.பி.ஏ., பயிற்சி திட்டத்தை துவக்கியுள்ளது.
துவக்கவிழாவில், ஐ.சி.டி., அகடமியின் சீனியர் தொடர்பு மேலாளர் விஜய்பாபு பங்கேற்று தொழில் துறையின் ஆட்டோமேஷன் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்கள் திறன்களை மேம்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார்.
இப்பயிற்சியில், 65 மாணவர்கள் பங்கேற்று தொழில்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆர்.பி.ஏ. கருவிகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வில், ரத்தினம் கல்விக்குழும தலைவர் மதன் செந்தில், சி.இ.ஓ. மாணிக்கம், சி.பி.ஓ. நாகராஜ், ரத்தினம் தொழில்நுட்ப வளாக முதல்வர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.