/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவப்பும் பச்சையும் சேர்ந்து எரியுது; சிக்னல் புரியாம மண்டை குழம்புது

ADDED : ஏப் 09, 2025 12:28 AM

கோவை; தடாகம் ரோடு, ஆவின் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில், பச்சை விளக்கும், சிவப்பு விளக்கும் சேர்ந்து எரிவதால், வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனர்.
கோவை, தடாகம் ரோட்டில் ஆவின் அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது. தடாகம் ரோடு, ராபர்ட்சன் ரோடு, மேற்கு சம்பந்தம் சாலை ஆகிய நான்கு சாலைகள் இங்கு சந்திக்கின்றன.
இதில், ராபர்ட்சன் ரோடு பகுதியில் இருந்து, மேற்கு சம்பந்தம் சாலைக்குள் நுழைவதற்கான சிக்னல் விளக்குகள், தொடர்ந்து பழுதடைந்து வருகின்றன.
சுமார் இரண்டு மாதங்கள் வரை, இந்த கம்பத்தில் உள்ள சிக்னல்கள் மட்டும் எரியாமல் இருந்தன. அது சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பழுதடைந்துள்ளது.
ராபர்ட்சன் ரோட்டில் இருந்து, மேற்கு சம்பந்தம் சாலைக்கு வருவோருக்கான சிக்னலில், சிவப்பு, பச்சை என இரு விளக்குகளும் எரிகின்றன. வாகன ஓட்டிகள் குழம்புகின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசலும், சிறு சிறு விபத்துகளும் நேர்கின்றன. உடனடியாக போக்குவரத்து போலீசார் சிக்னலை சரி செய்ய வேண்டும்.