/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய திட்டங்களுக்கு ஆன்லைனில் பதிவு
/
மானிய திட்டங்களுக்கு ஆன்லைனில் பதிவு
ADDED : ஜன 28, 2025 06:37 AM

அன்னுார் : 'நலத்திட்டங்களில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்,' என, வேளாண் வளர்ச்சி கூட்டத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தமிழக வேளாண்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு அன்னுார் ஒன்றியத்தில் நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் குன்னத்தூர் ஊராட்சி விவசாயிகளுடனான ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கூட்டம் குன்னத்தூரில் நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் புனிதா பேசுகையில், விவசாயிகள் மண்வள பரிசோதனை செய்ய வேண்டும். இதன் வாயிலாக, எந்த பயிருக்கு மண் ஏற்றது. எந்த உரம் இடலாம் என தெரிந்து சாகுபடி செலவை குறைக்க முடியும், என்றார். உதவி இயக்குனர் பிந்து பேசுகையில், ''ஆன்லைன் வாயிலாக வேளாண் மானியத்திட்டங்களுக்கு விவசாயிகள் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர், திட்ட ஆலோசகர் மாரியப்பன், காரமடை வேளாண் அறிவியல் நிலைய இளநிலை ஆராய்ச்சியாளர் துரை சாமி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் லோகநாயகி ஆகியோர் பேசினர்.

