/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் ஆய்வு
/
கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் ஆய்வு
ADDED : மே 29, 2025 12:15 AM
கோவை : கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கோவையில் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், கிளைகளை ஆய்வு செய்தார்.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம், கோவை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு சிறப்பங்காடி, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஆர்.எஸ்.புரம் கிளை, மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூடம் மற்றும் நகர கூட்டுறவு வங்கி தலைமையகம் ஆகியவற்றில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் ராமகிருஷ்ணன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் மேலாண் இயக்குனர் பழனிசாமி உடனிருந்தனர்.