ADDED : பிப் 17, 2025 10:55 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் புதிய நுால்கள் வெளியீடு மற்றும் நுால் அறிமுகம் நடந்தது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், 128வது நிகழ்வு, லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. எழுத்தாளர் செந்தில்குமார் வரவேற்றார். கவிஞர் மயிலவன் எழுதிய 'பழுத்த இலையின் புன்னகை' மற்றும் கவிஞர் ராமலிங்கத்தின், 'வருவதும், போவதுமான மழை' என்ற கவிதை நுால்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் லீலா எழுதிய ைஹக்கூ 'துாண்டிலில் ஜென்', 'அம்பேத்கரும், சூழலியலும்' நுால், கவிஞர் மதுமிதாவின், 'நினைவில் அன்புள்ள பறவை' நுாலும் வெளியிடப்பட்டது. ஏற்புரையில் கவிஞர்கள் தங்களது நுால்கள் குறித்து பேசினர்.
கவிஞர்கள் அம்சபிரியா, பூபாலன், ஜெயக்குமார், செந்திரு ஆகியோர் கவிதை நுால்களை வெளியிட்டு பேசினர். பேராசிரியர் மணிமேகலை கவிப்பாடல் பாடினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலக்கிய வட்டத்தினர் செய்திருந்தனர்.

