/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விழுப்புரத்துக்கு நிவாரணம்; நகராட்சி உதவிக்கரம்
/
விழுப்புரத்துக்கு நிவாரணம்; நகராட்சி உதவிக்கரம்
ADDED : டிச 03, 2024 06:00 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து விழுப்புரத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.
தமிழகத்தில், 'பெஞ்சல்' புயல் தாக்கத்தினால் மழை பெய்து வருகிறது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு, நிவாரண உதவி வழங்க நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டது. அதன்படி, பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து நிவாரண பொருட்கள் நேற்றுமுன்தினம் அனுப்பப்பட்டன.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து, ஐந்து கிலோ பொன்னி அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ ரவை, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய, ஆயிரம் எண்ணிக்கையிலான பைகள் என, 9.5 மெட்ரிக் டன் எடை நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.
அங்கு கோட்டகுப்பம் நகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.