/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளால் வீடு சேதம்; தொழிலாளிக்கு நிவாரணம்
/
யானைகளால் வீடு சேதம்; தொழிலாளிக்கு நிவாரணம்
ADDED : ஜன 15, 2024 10:02 PM

வால்பாறை:டான்டீ தொழிலாளியின் வீட்டை யானைகள் சேதப்படுத்தியதை தொடர்ந்து, வனத்துறை சார்பில் நிவாரணத்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா டான்டீ தேயிலை தோட்டம். இங்குள்ள லாசன் கோட்டம் பி மஸ்டர் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 3:00 மணிக்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மூன்று யானைகள், தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தியது.
தம்பிராஜ் என்பவரது வீட்டின் மேற்க்கூரையை சேதப்படுத்தியதோடு, வீட்டில் இருந்த பீரோ, கட்டில், லேப்டாப், 'டிவி', உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தியது. இதனையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா ஆகியோரின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு, வனத்துறை சார்பில், 10 ஆயிம் ரூபாய் நிவாரணத்தொகையாக மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் நேரில் வழங்கினார்.
மேலும் யானைகளால் வீடு சேதமான மூன்று தொழிலாளர்களுக்கு மாற்று இடத்தில் வீடு ஓதுக்கப்பட்டது. யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.