sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : நவ 11, 2024 05:11 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கரை' படிந்த 'காக்கிகள்' அச்சம்


பொள்ளாச்சியில் நானும், நண்பரும் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தோம். 'என்னப்பா போலீசார் எல்லாரும் பீதியில இருக்காங்க,' என பேச ஆரம்பித்தார். என்ன ஆச்சுன்னு விசாரிச்சேன்.

எஸ்.பி., மற்றும் கூடுதல் எஸ்.பி., ரெண்டு பேரும், 'ஸ்டிரிக்ட்'ஆக இருக்காங்களாம். எங்கயும் கை நீட்டக்கூடாது; எதற்கும் வளைஞ்சு கொடுக்கக்கூடாதுனு சொல்லியிருக்காங்களாம். அதுனால, தீபாவளி டைம்ல கூட பெருசா வசூல் எதுவும் நடக்கலையாம்.

இது மட்டுமா, நைட் ரவுண்ட்ஸ் போய், வசூல் பண்ணினா பனிஸ்மென்ட் பண்ணுறாங்களாம். பொள்ளாச்சி, ஆனைமலையில மட்டும் கடந்த ரெண்டு வாரத்துல, ஐந்து போலீஸ் சஸ்பென்ட் ஆகியிருக்காங்களாம்.

கல் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளில் பணம் கேட்டது, சட்ட விரோத மது விற்பனை, கள் விற்பனையில பணம் வாங்கினவங்க எல்லாரு மேலயும் விசாரணை நடக்குதாம்.

இதனால, ரெண்டு சரகத்துல இருக்கற மற்ற போலீசார் எல்லாரும் பீதியில இருக்காங்க. ஐ.பி.எஸ்., அதிகாரிக, எங்க, எப்ப வருவாங்கனு தெரியாததால, போலீசார் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்னு.

நேர்மையான ஆபீசருங்க வந்தா அப்படித்தான் இருக்கும். இன்னும் போக, போக என்ன நடக்கும்னு பார்ப்போம்னு, சொன்னாரு.

மைதானத்துக்கு சொந்தம் கொண்டாடுறாங்க!


உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான, நேதாஜி விளையாட்டு மைதானத்துல உடற்பயிற்சி செய்ய வந்த இருவர், நம்ம மைதானத்துல என்னதான் நடக்குது, ஆளுக்கு ஆள் சொந்தம் கொண்டாடுறாங்க. இந்த பிரச்னைக்கு ஒரு முடிவே இல்லையா என பேசிக்கொண்டிருந்தனர். மைதானத்துக்கு என்ன ஆச்சுனு விசாரிச்சேன்.

மைதானத்துல, நீயா, நானா போட்டி நடக்குது. மைதானம் என்னவோ பள்ளிக்குத்தான் சொந்தம். ஆனா, பள்ளி மாணவர்கள் இங்க வந்து விளையாடுறது இல்ல. பள்ளி வளாகத்துல இருக்கிற மைதானத்துல விளையாடுறாங்க.

ஆனா, பல தனியார் அமைப்புகள், இங்க விளையாட்டு போட்டிகள் அடிக்கடி நடத்துறாங்க. போட்டி நடத்துறவங்க பள்ளியில அனுமதி வாங்கிறதோட சரி, மைதானத்த மேம்படுத்துறதுக்கு ஒன்னும் பண்ணுறதில்ல.

இது பத்தாதுனு, முதியவர்கள் நடக்க வசதி ஏற்படுத்தறோம்னு சொல்லி, இன்னொரு சங்கம் நடைபாதைய சமன் படுத்துறங்கிற பேர்ல, மைதானத்த சுத்தி மேடு பண்ணி வச்சிருகாங்க. கடைசியில விளையாடுற இடம் குழியா இருக்கு.

அரசு பள்ளிக்கே மைதானம் சொந்தமா இருந்தாலும், பல ஆண்டா யார் யாரோ உரிமை கொண்டாடுறாங்க. இந்த பிரச்னை எப்போ தீரும்னு தெரியல. மாவட்ட நிர்வாகம் இதுல தலையிட்டு தீர்வு காண வேணும். அப்பத்தான், மைதானம் விளையாட்டு மைதானமா இருக்கும்னு, சொன்னாங்க.

வனத்துக்குள் பணம் பத்தும் செய்யும்!


வால்பாறையில பணம் இருந்தா எல்லா இடத்தையும் சுற்றி பார்க்கலாம், பணம் இல்லைனா ரோட்டையும், எஸ்டேட்டையும் பார்த்துட்டு போக வேண்டியது தான்னு, இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை கவனித்தேன்.

வெளியூருல இருந்து வால்பாறைக்கு நிறைய பேர் 'டூர்' வர்றாங்க. கொஞ்ச காலமா, வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், தங்கும் விடுதியில தங்கி, ராத்திரி நேரத்தில் வனவிலங்குகள பார்க்க காட்டுக்குள் போறாங்க.

ராத்திரில ரவுண்ட்ஸ் போனா, வனவிலங்குகள பார்க்கலாம்னு சொல்லி, அவங்கள அழைச்சுட்டு போயி, சிலர் பணம் பறிக்கறாங்க. ராத்திரி நேர டிரக்கிங்னு சொல்லி, வன விலங்குகள் நடமாடும் பகுதிக்கு அத்துமீறி கூட்டிட்டு போறாங்க.

வனத்துறை ஊழியர்கள் சிலரை கைக்குள்ள வச்சுக்கிட்டு, தடை செய்யப்பட்ட பகுதியான அக்காமலை கிராஸ் ஹில்ஸ் பகுதிக்கு சொந்த வண்டில கூட்டிட்டு போறாங்க. யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு நடமாடுற இடத்துக்கு, அத்துமீறி அழைச்சுட்டு போறாங்க.

இதனால, வனப்பகுதியில வனவிலங்குகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கு. வாங்க வேண்டியத வாங்கீட்டு, வனத்துறை அதிகாரிக வேடிக்கை பார்க்கறாங்க. வனத்த பாதுகாக்க வேண்டியவங்களே இப்படி இருந்தா என்ன செய்யறதுனு, சொன்னாங்க.

மோட்டார், கேபிள் ஒயரு திருட்டு


குடிமங்கலத்துல, பஸ் வருகைக்காக காத்திருந்த விவசாயிகள் இருவர், புதுசு புதுசா பிரச்னை வருவது, என்ன செய்யறதுனே தெரியல, என, பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னைனு விசாரிச்சேன். அவங்களோட மனக்குமுறல் இதோ...

தென்னையில், வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல், காய்ப்பு குறைவுனு பல்வேறு பிரச்னை இருக்கு. குடிமங்கலம் வட்டாரத்துல, இப்ப, புதுசா ஒரு பிரச்னை உருவாயிருக்கு.

நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு போயிட்டதால, போர்வெல் அமைத்து விவசாயம் பண்ணுறோம். போர்வெல் கேபிள் ஒயர்களை குறி வச்சு ஒரு கும்பல் திருடிட்டு இருக்கு. கேபிளில் இருக்கும் காப்பர் கம்பிக்கு நல்ல விலை கிடைக்கறதால, கட் பண்ணி எடுத்துட்டு போயிடுறாங்க.

சில தோட்டத்துல, மோட்டார்களும் திருட்டு போயிருக்கு. இதனால, கிணறு, போர்வெல்ல இருந்து தண்ணீ எடுத்து பாய்ச்ச, மீண்டும் பல லட்சம் ரூபா செலவு பண்ண வேண்டியிருக்கு. விவசாயிக ஏற்கனவே நஷ்டத்துல போராடிட்டு இருக்கறப்ப, இந்த இழப்பையும் தாங்க வேண்டியிருக்கு.

மோட்டார், கேபிள் திருட்டு போகுதுனு, குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுல புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கறதில்ல. புகார வாங்கவே தயங்குறாங்க. இந்த பிரச்னை, ஒரு வருஷமா இருக்கு.

தாராபுரம் பகுதியில, இந்த மாதிரி திருடிட்டு இருந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்தாங்க. அதே மாதிரி உடுமலையிலும் போலீசார் 'ஆக் ஷன்' எடுக்கணும், நைட் ரவுண்ட்ஸ் போகணும். அப்பத்தான், விவசாயிக நிம்மதியாக இருக்க முடியும்னு, சொன்னாங்க.

மாற்றுத்திறனாளிகள அலைய விடாதீங்க!


பொள்ளாச்சியில் நண்பருடன் டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு வந்த மாற்றுத்திறனாளி 'என்னங்க இப்படி பண்ணுறாங்க, அதிகாரிகளுக்கு மனசாட்சியே இல்லையா,' என, வேதனையுடன் பேசத் துவங்கினார்.

பொள்ளாச்சி ஜி.எச்.,ல் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மற்றும் குறைதீர் முகாம் நடத்தினாங்க. எல்லா பிரிவில் இருந்தும் டாக்டர்கள் வந்து, பரிசோதனை செய்து, மாற்றுத்திறனை கணக்கிட்டு, பாதிப்பு குறிப்பிட்டு தருவாங்க.

அதைப்பெற்று, அடையாள அட்டை, உதவித்தொகை பெற முடியும் என்ற நம்பிக்கையோடத்தான் வந்தோம். ஆனா, நரம்பியல் டாக்டர் வரலீங்க. உடல் நடுக்கத்துடன் வந்த ஒருவர், 'ஏற்கனவே கோவைக்கு போயிட்டு வந்திருக்கேன், இந்த முகாமுல நரம்பியல் டாக்டர் இல்ல. முகாமில இருக்கறவங்க மீண்டும் கோவை போயிட்டு வாங்கன்னு சொல்லுறாங்கனு,' புலம்பினாரு.

இதை கண்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள், முகாமிற்கு வந்த டாக்டர்களிடம் பேசி பார்த்தாங்க. நரம்பியல் டாக்டர் அறிக்கை இல்லாம, நாங்க ஒன்றும் பண்ண முடியாதுன்னு சொன்னாங்களாம். அதுக்கப்பறம், 'இவரால நடக்க முடியாத சூழலில் என்ன சார் செய்ய முடியும்,' என பேசி ஒருவழியா சான்று கொடுக்க மதிப்பீடு வழங்கியிருக்காங்க.

இந்த மாதிரி முகாம் எல்லாம் நடத்துறப்ப அனைத்து டாக்டர்களும் வந்தா, நோக்கம் நிறைவேறும். மாற்றுத்திறனாளிகளுக்கு அலைச்சல் இருக்காதுனு, சொல்லிட்டு கிளம்பினாரு.

வனத்த காக்கறவங்களுக்கு உணவு கொடுங்க!


உடுமலை வனச்சரக அலுவலகத்துக்கு போயிருந்தேன். அங்கு வந்திருந்த சூழல் ஆர்வலர்கள் வனத்துறையில என்ன நடக்குதுனு தெரியலைனு புலம்பினாங்க. என்ன விஷயம்னு விசாரித்தேன்.

உடுமலை, அமராவதி வனச்சரகங்கள்ல, வனப்பாதுகாப்பு, கண்காணிப்பு பணிக்கு, மலைவாழ் மக்கள் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள, வேட்டை தடுப்பு காவலர்களா, குறைந்த சம்பளத்துல நியமனம் செஞ்சிருக்காங்க.

அவங்களுக்கு வனத்துறை சார்பில், தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில, திடீர்னு தனியார் ஒப்பந்தம் முறையில, தற்காலிக பணியாளர்களாக மாற்றி, குத்தகைதாரர் பெயரில் ஊதியம் கொடுக்கறாங்க. இதனால, வழக்கமாக வழங்கப்பட்ட, 12,900 ரூபாயை விட மிகவும் குறைவா சம்பளம் கொடுக்கறதால அதிருப்தியில இருக்காங்க.

இந்த வனச்சரகங்களில், 16 வேட்டை தடுப்பு காவல் முகாமுல, 56 பேர் பணியாற்றுறாங்க. அவங்க வனத்துல இருக்கற முகாம்ல, தங்கி வேலை பார்க்கறதுக்கு, வனத்துறை சார்பில, அரிசி, பருப்பு, சர்க்கரை, மளிகை பொருட்கள் என, ஒவ்வொரு முகாமுக்கும் ஏறத்தாழ, ஐந்தாயிரம் ரூபா மதிப்புள்ள உணவு பொருள் வழங்கப்படும்.

கடந்த, மூனு மாசமா, வேட்டை தடுப்பு காவலர்களுக்கு, உணவு பொருட்கள் வழங்காம, அரசு ஒதுக்கும் தொகைய, அதிகாரிகள், 'அபேஸ்' பண்ணிட்டாங்களாம்.

வனத்தை காக்கும் பணியில் நேரடியாக ஈடுபடும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு உணவுக்கு கூட வழியில்லாத நிலையில், வனம் பாதுகாப்பு பணியில தொய்வு ஏற்பட்டிருக்குனு, சொன்னாங்க.

நகை கடை ரெய்டும்; தொடரும் மர்மமும்!

பொள்ளாச்சி கடை வீதி நண்பர் ஒருவருடன், நியூஸ்கீம் ரோடுல பேக்கரி முன் நின்றிருந்தேன். நகைக்கடையில ராத்திரி முழுக்க பஞ்சாயத்து நடந்ததுனு, புது விஷயத்தை பேச துவங்கினாரு.கடைவீதியில இருக்கற ஒரு நகைக்கடையில, நாலு நாளுக்கு முன்னாடி, கர்நாடகா போலீசார் வந்து விசாரணை பண்ணினாங்க. அவங்களோட, உள்ளூர் போலீசாரும் இருந்தாங்க.கர்நாடாகா போலீசார், திருட்டு வழக்கில் ஒருவரை கைது செய்திருக்கோம். அவரு, உங்களிடம், 1,500 கிராம் சவரன் விற்பனை பண்ணியிருக்காரு. அதெல்லாம் திருட்டு நகை என விளக்கினர்.அந்த கடை உரிமையாளர், 'அவர் யாருனு எனக்கு தெரியாது; நகை வாங்கியது உண்மைதான். வெறும், 60 கிராம் தான் வாங்கினேன்னு சொல்லியிருக்காரு. அவங்க விடுவாங்களா, வித்ததுக்கு எல்லா ரெக்கார்டும் இருக்கு, வாங்கின திருட்டு நகைய கொடுத்துடுங்கனு கறாரா பேசியிருக்காங்க.கர்நாடகா போலீசாரை சரிக்கட்டி, வெறும் கையோடு திரும்பி அனுப்ப எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்காங்க. ரொம்ப நேர பேச்சுவார்த்தைக்கு அப்புறம், அந்த நகை கடை உரிமையாளர், 500 கிராம் தங்கம், ரெண்டரை கிலோ வெள்ளி பொருட்களை தருவதாக ஒதுக்கிட்டாராம்.கடைவீதியில, இது தான், 'ஹாட் டாக்'. இப்ப, உள்ளூர் போலீசார் திருட்டு நகை வாங்கற நகைக்கடைகளோட 'லிஸ்ட்' தயார் பண்ணிட்டு இருக்காங்க. இனி, என்னென்ன நடக்குமோ, ஒரே மர்மமா இருக்குனு, விஷயத்த சொன்னாரு.








      Dinamalar
      Follow us