sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : டிச 15, 2024 11:06 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.எல்.ஏ.,வ நிற்க வச்சு கேட்போம்!


வால்பாறை டீக்கடையில் மழைக்கு ஒதுங்கி நின்றேன். அங்கிருந்த இரு முதியவர்கள், குளிருக்கு டீயை பருகியபடி, 'இங்க, ஆயிரம் பிரச்னை இருக்கு, யாருகிட்ட புகார் கொடுக்கறதுன்னு தெரியல,' என, பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.

வால்பாறையில ஒன்பது வருஷமா எம்.எல்.ஏ., ஆபீஸ் இருந்தும் திறக்கறதில்லை. இதனால எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமியை சந்திச்சு, மக்கள் பிரச்னைக்கு மனு கொடுக்க முடியல.

அவங்க கட்சிக்காரங்க கிட்ட கேட்டா, ஆபீஸ் டேமேஜ் ஆயிருச்சுனு சொல்லி சொல்லியே நாட்கள ஓட்டுறாங்க. மக்கள் கேள்வி கேட்கறதால, வாடகை கட்டடத்துல ஆபீஸ் திறந்திருக்காங்க. மக்களை நேரில் சந்தித்து மனு வாங்குவேன்னு சொல்லிட்டு, மாசத்துக்கு ஒருக்கா எம்.எல்.ஏ., வர்றாரு.

அப்பவும், கட்சிக்காரங்கள மட்டும் சந்திச்சுட்டு, மக்கள் பிரச்னை எதையும் கேட்காம ஓட்டம் பிடிச்சுடுறாரு. ஆபீஸ்க்கு போனா, அ.தி.மு.க., காரங்க தான் இருக்காங்க. அவங்க கிட்ட என்னத்த சொல்ல. எலக் ஷனுக்கு ஓட்டு கேட்டு வரும் போது, ரோட்டுல நிற்க வச்சு கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டுட்டு தான், ஓட்டு கேட்க விடணும்னு, ரெம்ப கோபமா சொன்னாங்க.

மாணவர்களுக்கு நல்லதுனு பார்க்கணும்!


உடுமலையில, பொதுத்தேர்வு எழுதப்போற மாணவர்களோட நிலை எந்த அளவுல இருக்குனு தெரிஞ்சுக்கத்தான் விடைத்தாளை வேற பள்ளில கொடுத்து திருத்தறாங்க. ஆனா, நம்ம மாவட்டத்துலதான் அதுக்கும் முட்டுகட்டை போடுறாங்களே, என, கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் இருவர் பேசிக்கொண்டனர். என்ன பிரச்னைனு விசாரித்தேன்.

இப்ப நடந்துட்டு இருக்கிற அரையாண்டு தேர்வுல, விடைத்தாள்களையெல்லாம், பொதுத்தேர்வு மாதிரியில வேறு பள்ளி ஆசிரியர்கள் திருத்துவதற்கு, திருப்பூர் மாவட்டத்துல கல்வித்துறை ஏற்பாடு செஞ்சிருக்கு.

இதே மாதிரி, ஒரு சில மாவட்டத்துல அரையாண்டு தேர்வு விடைத்தாள அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் திருத்தாம, வேறவேற பள்ளிகள்ல திருத்தி வழங்கறாங்க. இதுல என்ன இடையூறு இருக்குனு தெரியல.

சொல்லப்போனா இப்படி மாத்தி திருத்தறப்பதான், நம்ம பள்ளி மாணவர்களோட கல்வி நிலைய அறிய முடியும். ஆனா, அதுக்கும் நம்ம ஆசிரியர்கள் சங்கத்த முன்நிறுத்தி அதுல உடன்பாடில்லை, அந்தந்த பள்ளியில தான் திருத்தனும்னு கேட்கறாங்க. எல்லாத்துக்கும் முட்டுக்கட்ட போடாம, மாணவர்களுக்கு எது நல்லதுனு ஆசிரியர்கள் பார்க்கணும்னு, சொன்னாங்க.

செக்போஸ்ட் அமைச்சு தடுக்க போறாங்க!


பெதப்பம்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தேன். விவசாயிகள் சிலர், டிப்பர் லாரிகளை கைநீட்டி காட்டி, ஆவேசமா பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு என்ன கோபம்னு விசாரிச்சேன்.

மடத்துக்குளம் பகுதியிலிருந்து, நான்கு வழிச்சாலையில் வந்து, பெதப்பம்பட்டி, செஞ்சேரிமலை வழியாக கேரளாவுக்கு டிப்பர் லாரில கனிம வளங்களை கொண்டு போறது அதிகரிச்சிருக்கு.

'ஓவர் லோடு' ஏற்றி செல்லும் லாரிகள் குறித்து விவசாயிகள் புகார் கொடுத்தா, அதிகாரிக கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கறாங்க.கேரளா பதிவெண் கொண்ட லாரிகளில் தான் அதிகளவு விதிமீறல் நடக்குது.

சில நாளுக்கு முன், மூங்கில்தொழுவு பிரிவில், 'ஓவர் லோடு' ஏற்றி படுவேகமாக சென்ற லாரியை விவசாயிகள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தினோம். இருந்தாலும், விதிமீறல் தொடர்கதையாகவே இருக்கு.

இதுக்கு பின்னாடி, ஆளுங்கட்சி பிரமுகர்களின் வலுவான ஆதரவு இருக்கு. நான்கு வழிச்சாலை, தேசிய, மாநில நெடுஞ்சாலை மட்டுமல்லாது கிராம ரோடுகளிலும், 'ஓவர் லோடு' வாகனங்களால பாதிப்பு ஏற்படுது. அதிவேகமாக பறக்கும் லாரிகளால், கிராம ரோடுகளில் போகவே அச்சப்படுறோம்.

எந்த நடவடிக்கையும் இல்லாததால, நாங்களே செக்போஸ்ட் அமைத்து விதிமீறி செல்லும் வாகனங்களை சிறைப்பிடிக்கும் போராட்டத்துல ஈடுபட போறோம்னு, சொன்னாங்க.

அரசு விழாவுல பெண் தலைவரை கண்டுக்கல!


காட்டம்பட்டியில் நண்பரை சந்திக்க சென்றேன். அங்க, பஸ் ஸ்டாப்புல ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருந்தாங்க, என்னன்னு காது குடுத்து கேட்டேன்.

நெகமம், காட்டம்பட்டியில போன வாரம் 12ம் தேதி, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினாரு. இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், காட்டம்பட்டி ஊராட்சி தலைவர் மணி, துணை தலைவர் கிரி கதிர்வேல் என பலர் கலந்துக்கிட்டாங்க.

அமைச்சர் வரும் போது, கூட்டம் சேர்க்கணும் பக்கத்து ஊர்ல இருந்து ஆட்கள கூட்டிட்டு வந்தாங்க, அவங்களுக்கு மத்தியானத்துக்கு பிரியாணி, வாட்டர் பாக்கெட் எல்லாம் கொடுத்தாங்க.

ஊராட்சி துணை தலைவர் தி.மு.க.,வுல முக்கிய பொறுப்பில் இருக்காரு. அதனால எல்லாரும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவரை யாருமே கண்டுக்கல. பொதுமக்களோடு ஒருவரா, அவங்க ஓரமா நின்னுகிட்டு இருந்தாங்க.

தி.மு.க.,வுல பெண்ணுரிமை, சமத்துவம் பேசுவாங்க. அதிகாரிகளும் அடிக்கடி உறுதிமொழி எடுக்கறாங்க. ஆனால், தாழ்த்தப்பட்ட ஊராட்சி தலைவரை எப்படி நடந்தணும்னு கூட தெரியல. ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணிட்டு, உள்ளுக்குள்ள இப்படி தீண்டாமையை கடைபிடிக்கறாங்களேனு, பேசிக்கிட்டாங்க.

பஸ் பணி ஒதுக்கவும் 'கவனிப்பு'


பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், 'இப்படியே போச்சுனா, வி.ஆர்.எஸ்., வாங்க வேண்டியது தான்,' என, மூத்த டிரைவர் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்.

அரசு போக்குவரத்து கழக, பொள்ளாச்சி பணிமனைகளில டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கான பணி நேரம், 'ஆப்ரேட்' பண்ணும் பஸ் விபரம் எல்லாமே, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களே ஒதுக்கறாங்க.

ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும், அந்தந்த கட்சி தொழிற்சங்கம் களமிறங்கி இப்படி பண்ணுறாங்க. தொழிற்சங்கத்துகாரங்க, அவரவர் சார்ந்த கட்சி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கறாங்க.

குறிப்பாக, நல்ல கண்டிஷன் பஸ்களை இயக்கச் செய்யறாங்க. பணி வலுவை குறைக்கறாங்க, நைட் நேர பணி கொடுக்கறதில்லை. ஆனா, சமீப காலமா அனைத்து தரப்பு கட்சியினரும் அவங்கவங்க விருப்பத்துக்கு ஏற்ப பணி ஒதுக்கறாங்க. பணி ஒதுக்கறதுக்கு 'கவனிப்பு' வாங்கறதாவும் புகார் இருக்கு.

மாற்றுக் கட்சியை சேர்ந்தவங்க வழக்கமான பணில இருந்து விடுவிச்சா அவங்கருக்கு தொழிலாளர் சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கறதில்ல. இதனால, டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ரெம்ப சிரமமா இருக்குனு, புலம்பினர்.

பயம் காட்டின முள்ளம்பன்றி


பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீசில் நண்பருடன் நின்றிருந்தேன். அங்கு வந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர், 'ஒர்க் ஷாப் டெப்போவுல முள்ளம்பன்றி ஒன்று அலப்பற பண்ணிடுச்சுனு' குதற்கமா பேசினார். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.

அரசு போக்குவரத்து கழக புதுப்பித்தல் பிரிவுல, காலை நேரத்துல பணிக்கு வந்த போது, ஊழியர்கள் எல்லாரும் அதிர்ச்சியா நின்னுட்டு இருந்தாங்க. என்னன்னு பார்த்தா, ஒரு முள்ளம்பன்றி டெப்போவுக்குள்ள உலாத்திட்டு இருந்துச்சு.

வனப்பகுதியில இருந்து எப்படியோ வழி தவறி பொள்ளாச்சி டெப்போவுக்கு வந்திருச்சு. அத பிடிக்க போய், முள்ளம்பன்றி முள் குத்திருச்சுனா அதுக்கு சிகிச்சை எடுக்கணும். ஆனா, அத பிடிச்சா தான் உள்ளே செல்ல முடியும்.

அதனால, வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம். அவங்க வர்றதுக்குள்ள, முள்ளம்பனறி எங்கேயோ போயிடுச்சு. எங்க போச்சுனு வனத்துறை ஊழியர்கள் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியல. முள்ளம்பன்றியை காணோம். மறுபடியும் பார்த்தா உடனே தகவல் கொடுங்கனு சொல்லிட்டு போயிட்டாங்க.

எங்கிருந்து முள்ளம்பன்றி வந்துச்சுனு தெரியல. ஆனா, அரை மணி நேரத்துல எல்லாருக்கும் பயம் காட்டிட்டு போயிருச்சுனு, சொன்னார்.

மரக்கன்று உடனே பெரிய மரமாகுமா?

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுல, சுற்றுச்சூழல் ஆர்வலரா இருக்கற நண்பரை பார்த்தேன். 'வனத்துறையில மரக்கன்று வளர்க்கறத பாராட்டலாம்; ஆனா, மரத்த வெட்டியத மறைக்க மரக்கன்று வளர்க்கறத என்னனு சொல்ல,' என, செய்திக்கு தீணி போட்டோர். என்ன நடந்ததுனு கேட்டேன்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்துல, வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தற மாதிரி இருந்த, சீமைக்கருவேல மரங்கள வெட்டி அகற்ற திட்டமிட்டாங்க. இரு சரகத்திலும், தலா, 20 ஹெக்டேர் பரப்பளவுல இருந்த மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள, 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டாங்க.வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில, பொக்லைன், 'கட்டிங் மிஷின்' பயன்படுத்தக்கூடாதுனு விதிமுறை இருக்கற நிலையில, கனரக இயந்திரங்கள் பயன்படுத்தினாங்க.அஞ்சு ஆண்டுக்கு முன்னாடி, மூணாறு ரோட்டின் இரு புறமும், தலா, 5 ஹெக்டேர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள இதே மாதிரி வெட்டினாங்க. அந்த நேரத்துல புலிகள் காப்பகத்துல வெட்டின மரத்தை அகற்ற அனுமதி கிடைக்கல. அதனால, வெட்டிய மரங்கள அப்படியே இருந்தது.இப்ப, டெண்டர் விட்டு மரம் வெட்டும் போது, மூணாறு ரோட்டுல வெட்டியிருந்த பல லட்சம் ரூபா மதிப்புள்ள அந்த மரங்களையும், இந்த மரத்தோட சேர்த்து 'அபேஸ்' பண்ணிட்டாங்க. இதனால, வனத்துறைக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு; ஆனா, அதிகாரிக பாக்கெட் நிரம்பிடுச்சு.மூணாறு ரோட்டுல வெட்டின மரங்கள் எடுத்தது யாருக்கும் தெரியாம இருக்க, அங்க புதுசா மரக்கன்றுகள வனத்துறையினர் நடவு செய்திருக்காங்க. மரக்கன்றுகள் உடனே மரமாகுமா. இதெல்லாம் வனத்துறையினருக்கே வெளிச்சம்னு, ஆதங்கப்பட்டாரு.








      Dinamalar
      Follow us