/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு வித்யாலயா பள்ளியில் குடியரசு தின விழா
/
நேரு வித்யாலயா பள்ளியில் குடியரசு தின விழா
ADDED : ஜன 27, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளியில், 76வது குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் ஸ்ரீ மகாவீர் போத்ரா தலைமை வகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.
பள்ளியின் சி.டபிள்யூ.ஏ., குழுவின் உறுப்பினர்கள் சிவக்குமார், ஷ்ரெனிக் மேத்தா, நிலேஷ் ரங்கா ஆகியோர் தேசிய கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடந்தன.
இதில், செயலாளர் ஸ்ரீ கோபால் புராடியா, துணைச்செயலாளர் பாப்னா, எஸ்.என்.எம்.வி., கல்லுாரி செயலாளர் சுனில் நஹாடா, பள்ளி முதல்வர் பங்கஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

