/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை, கிணத்துக்கடவில் கல்லறை நிலம் ஒதுக்க கோரிக்கை
/
மதுக்கரை, கிணத்துக்கடவில் கல்லறை நிலம் ஒதுக்க கோரிக்கை
மதுக்கரை, கிணத்துக்கடவில் கல்லறை நிலம் ஒதுக்க கோரிக்கை
மதுக்கரை, கிணத்துக்கடவில் கல்லறை நிலம் ஒதுக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2024 12:21 AM

கோவை : மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் கல்லறை அமைக்க, தலா மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கக்கோரி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம், கிறிஸ்தவ அமைப்பினர் முறையிட்டனர்.
கோவைக்கு வந்திருந்த அமைச்சரிடம், கிணத்துக்கடவு தொகுதி கிறிஸ்தவ ஆலயங்கள் அசோசியேசன் சார்பில், மதுக்கரை நகராட்சி முன்னாள் தலைவர் சாலம்பாட்ஷா தலைமையில், சங்க நிர்வாகிகள் அளித்த மனு:
மதுக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கல்லறை இல்லாமல் சிரமப்படுகின்றனர். மதுக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான குப்பை கிடங்கு, மின் மயானம் அருகில் நிலம் இருக்கிறது. அதிலிருந்து, 3 ஏக்கர் நிலம் ஒதுக்கி தர வேண்டும். அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான கல்லறையாக அமைக்கலாம்.
இதேபோல், கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், அரசுக்கு சொந்தமான இடத்தில், 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்தால், அங்குள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு, பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதிகிறிஸ்தவ ஆலயங்கள் அசோசியேசன் தலைவர் ஆன்டனி செல்வராஜ், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பென்ஹர், கமிட்டி உறுப்பினர்கள் அருள்பிரபு, டேவிட், வில்லியம் சார்லஸ் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.