UPDATED : நவ 01, 2026 09:11 PM
ADDED : நவ 01, 2026 09:06 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: நீரை நன்கு காய்ச்சி வடிகட்டிய பின் குடிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம், பவானி ஆற்றில் இருந்து தினமும், ஒரு கோடியே, 20 லட்சம் லிட்டர் நீர் எடுத்து சுத்திகரித்து, 33 வார்டு மக்களுக்கு விநியோகிக்கிறது. குன்னுார் மற்றும் கோத்தகிரியில் பெய்து வரும் மழையால், ஆற்றில் நீர் தண்ணீர் செந்நிறத்தில் வருவதால், நீரை நன்கு காய்ச்சி வடிகட்டிய பின் குடிக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனர் வாசுதேவன், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
