கோவையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி திரளான தொண்டர்கள் பங்கேற்பு
கோவையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி திரளான தொண்டர்கள் பங்கேற்பு
UPDATED : நவ 01, 2026 09:27 PM
ADDED : நவ 01, 2026 09:11 PM

கோவை: ஆர்.எஸ்.எஸ்.,பேரணிகோவை மாநகரில் ஆறு இடங்களில் நேற்று நடந்தது. இதில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின்(ஆர்.எஸ்.எஸ்.,) நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக விஜயதசமி பதசஞ்சலன் அணிவகுப்பு ஊர்வலம் கோவை மாநகரில் ஆறு இடங்களில் நேற்று நடந்தது. ராம் நகர் ராமர் கோவில் அருகே துவங்கிய ஊர்வலம் சத்யமூர்த்தி ரோடு, விவேகானந்தா ரோடு, சாஸ்திரி ரோடு, சென்குப்தா வீதி, வெங்கடசாமி லே-அவுட், காட்டூர் விநாயகர் கோவில், அன்சாரி வீதி, காளிங்கராயன் வீதி வழியாக மீண்டும் துவங்கிய இடத்துக்கு வந்தது. ஊர்வலத்துக்கு பின் ராமர் கோவில் அருகே பொதுக்கூட்டம் நடந்தது.
மாநகரில் நடந்த அணிவகுப்பில், ஆ.எஸ்.எஸ்., அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
கோவை குளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து துவங்கிய பேரணி தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன், மாதம்பட்டி ரோடு, போளுவாம்பட்டி ரோடு, புத்துார் ரோடு வழியாக, சந்தைப்பேட்டை அடைந்து, மாரியம்மன் கோயில் மைதானத்தில் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில், மதுரை ஆதினம் ஸ்ரீமத் விஷ்லிங்கம் தம்பிரான் ஆசியுரையாற்றினார். மகாநகர் காரியவாக் சங்கரநாராயணன் சிறப்புரையாற்றினார்.
