/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: முகாம் நடத்த கோரிக்கை
/
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: முகாம் நடத்த கோரிக்கை
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: முகாம் நடத்த கோரிக்கை
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: முகாம் நடத்த கோரிக்கை
ADDED : ஜன 07, 2024 11:14 PM
அன்னுார்;காட்டம்பட்டி ஊராட்சியில், காட்டம்பட்டி, முதலிபாளையம், வரதையம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரு வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில்,'காட்டம்பட்டி பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மூவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது.
மேலும் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகமும், சுகாதார துறையும் காட்டம்பட்டி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். தூய்மை பணியை வேகப்படுத்த வேண்டும்,' என்றனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் கூறுகையில், 'அப்பகுதியில் இந்த வாரம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்,' என்றார்
* காரமடை நகராட்சி, மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து காரமடை வட்டார சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காரமடை பகுதியில் வெள்ளியங்காடு, வேளாங்கண்ணி நகர், மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களில், இதுவரை மொத்தம் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கட்டடங்களின் மேல் பகுதிகளில், வீடுகளில் குடிநீருக்காக பயன்படுத்தும் தொட்டிகள், செடிகள் வளர்க்க வைத்துள்ள தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழுக்கள் உற்பத்தியாகாதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.