/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண்மை கலந்தாய்வு கூட்டம் நடத்த கோரிக்கை
/
வேளாண்மை கலந்தாய்வு கூட்டம் நடத்த கோரிக்கை
ADDED : செப் 16, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் செந்தில்குமார், கலெக்டரிடம்அளித்த மனு:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர்கள், பல்கலை விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், வேளாண் சார்ந்த பல்வேறு அரசுத் துறைகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கி, மாதாந்தோறும், கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும். வேளாண் பல்கலை, அரசுத்துறைகள், விவசாயிகள் இணைந்து பங்கேற்கும் இக்கூட்டங்களால்,பல்வேறு நல்ல முடிவுகள் கிடைக்கும். வேளாண் பல்கலைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தொடர்பு வலுவடையும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.