/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.பி.எப்., ஓய்வூதியம் ரூ.9,000 உயர்த்தி வழங்க கோரிக்கை
/
இ.பி.எப்., ஓய்வூதியம் ரூ.9,000 உயர்த்தி வழங்க கோரிக்கை
இ.பி.எப்., ஓய்வூதியம் ரூ.9,000 உயர்த்தி வழங்க கோரிக்கை
இ.பி.எப்., ஓய்வூதியம் ரூ.9,000 உயர்த்தி வழங்க கோரிக்கை
ADDED : மே 30, 2025 12:22 AM

கோவை, ; இ.பி.எப்., ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்தி வழங்குமாறு கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம், சிங்காநல்லுாரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது.
இதில், 2025-27ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. முடிவில், சங்க தலைவராக ராஜாமணி தேர்வு செய்யப்பட்டார்.
முதன்மை செயலாளராகவும், பொருளாளராகவும் மனோகரன் மற்றும் செயலாளர்கள் நான்கு பேர், துணை தலைவர்கள் ஐந்து பேர், உதவி செயலாளர்கள் மூவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிறைவில், 'வருங்கால வைப்பு நிதியான இ.பி.எப்., ஓய்வூதியம் ரூ.1,000க்கும் குறைவாகவே வழங்கப்படும் நிலையில்,40 ஆண்டுகளாக உழைத்த தொழிலாளர்களுக்கு ரூ.9,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை, 9ம் தேதி அனைத்து தொழிற்சங்க இயக்கங்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.