/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர்மண்டி கிடக்கும் நடைபாதை சீரமைக்க கோரிக்கை
/
புதர்மண்டி கிடக்கும் நடைபாதை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 25, 2025 11:58 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே உடுமலை ரோட்டில், புதர்மண்டி கிடக்கும் நடைபாதை மற்றும் சர்வீஸ் ரோட்டை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலை, 4.5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க, மீடியன், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், அருகே உள்ள சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ் ரோடு வழியே முக்கிய வழித்தடத்தை வந்தடையும் வகையில், இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதற்கேற்ப, மின்வாரியம் அலுவலகம் ஒட்டிய பகுதியில் சர்வீஸ் ரோடு, முழுமை அடையாத நிலையில், நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சர்வீஸ் ரோடு மற்றும் நடைபாதையை மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், சில இடங்களில் புதர்மண்டி கிடைக்கிறது. அவைகளை அப்புறப்படுத்தி சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது: சாலையின் நடுவே அமைந்துள்ள மீடியன் பகுதியிலும் செடிகள் வளர்ந்து நிற்கின்றன. அவ்வப்போது, அவை அப்புறப்படுத்தப்படுகின்றன.
அதேநேரம், புதர்மண்டி கிடக்கும் சர்வீஸ் ரோடு, நடைபாதையை கடந்து செல்ல பலரும் அச்சப்படுகின்றனர். புதர்மண்டி கிடக்கும் சர்வீஸ் ரோடு மற்றும் நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, விஷமிகள் சிலர், சர்வீஸ் ரோட்டை எளிதாக கடக்கும் வகையில், தடுப்பு கம்பிகளை சேதப்படுத்துகின்றனர். அவர்களைக் கண்டறிந்தும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.