/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி மாற்றியமைக்க கோரிக்கை
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : ஜன 14, 2025 01:22 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தவும், வலுவிழந்த மின் இணைப்பு கம்பங்களை மாற்றியமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், பெரும்பாலான இரும்பு மின்கம்பங்கள் சிமென்ட் கம்பங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. வாகனங்கள் கடந்து செல்லும் பகுதிகளில் உள்ள இரும்பு மின்கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளது.
ஆனால், நகரில், ஒரே கம்பத்தில் இருந்து, அதிகப்படியான கட்டடங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜாமில்ரோடு, ஜூம்ளி கிணறு வீதி, இமான்கான் வீதி என, பல்வேறு வழித்தடங்களில், உயரழுத்த மின் கம்பிகள், கட்டடங்களை உரசும் வகையில் தாழ்வாக உள்ளது.
இவ்வாறு, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்திடவும், தேவையான இடங்களில் வலுவிழந்த மின் இணைப்பு கம்பங்களை மாற்றியமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'சில பகுதிகளில், அதிகப்படியான சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும், வலுவிழந்த கம்பங்களும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. விபத்துகளை தவிர்க்க, ஆபத்தான நிலையில் உள்ள இணைப்பு கம்பிகளை மாற்றியமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.