/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடமாடும் கால்நடை மருந்தகம் துவங்க வேண்டுமென கோரிக்கை
/
நடமாடும் கால்நடை மருந்தகம் துவங்க வேண்டுமென கோரிக்கை
நடமாடும் கால்நடை மருந்தகம் துவங்க வேண்டுமென கோரிக்கை
நடமாடும் கால்நடை மருந்தகம் துவங்க வேண்டுமென கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2025 10:13 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் ஒன்றிய அளவில், நடமாடும் கால்நடை மருந்தகங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை சாகுபடி, காய்கறி சாகுபடியை அடுத்து, கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும். அவற்றுக்கென, 39 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, கால்நடை துறையால், பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், சில பகுதிகளில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, மருந்தகங்களுக்கு தொலைதுாரம் செல்ல வேண்டியுள்ளது.
நோய்வாய்ப்பட்ட கால்நடைகள், சினை ஊசி போடப்பட்ட மாடுகளை நீண்ட துாரம் நடந்தே அழைத்துச் செல்வதால், சிகிச்சை பயனளிக்காத நிலை ஏற்படுகிறது. அதற்கு மாறாக, தனியார் கால்நடை டாக்டர்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாவட்ட அளவில் நடமாடும் மருந்தகம் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒன்றிய அளவில் இத்திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் கூறுகையில், 'கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பயனடையும் வகையில், குறிப்பிட்ட கிராமங்களை ஒன்றிணைத்து, கூடுதலாக கால்நடை மருந்தகங்கள் ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், ஒன்றிய அளவில் நடமாடும் கால்நடை மருந்தகங்களை செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.