/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத போதகர்கள் நலவாரியம் அமைக்க அரசுக்கு கோரிக்கை
/
மத போதகர்கள் நலவாரியம் அமைக்க அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2025 12:14 AM
கோவை : தமிழகத்தில், கிறிஸ்தவ மத போதகர்கள் நலவாரியம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் பிரதம பேராயர் ஜெயசிங் தலைமையில், கோவை தொண்டாமுத்துார் இயேசு ராஜா தேவாலயத்தில், பேராயர்கள் மற்றும் ஆயர்களை நிலைப்படுத்தும் அபிஷேக, ஆராதனை விழா நடந்தது. இதில், எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின், அகில இந்திய பொதுச் செயலாளர் பேராயர் டேனியல், பேராயர் தீனதயாளன் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பேராயர் ஜெயசிங் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும், உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க, அரசு ஆணையிட்டுள்ளது. கிறிஸ்தவ மத போதகர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என, கடந்த தேர்தலின் போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, கிறிஸ்தவ மத போதகர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும்.
கோவை காளப்பட்டியை சேர்ந்த, கிறிஸ்தவ மத போதகர் ஹாரி கோம்ஸ், கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, அவரது உறவினர்கள், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, கோவை மாவட்ட கலெக்டர், கோவை மாநகர காவல் துறை கமிஷனருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
இதில் உரிய நடவடிக்கை எடுத்து, உண்மை தன்மையை அறிந்து, விசாரணையை துரிதப்படுத்தி நீதி வழங்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக சிறுபான்மையினர் தலைவரை நேரில் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.