/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு
/
கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு
ADDED : ஜன 24, 2024 12:51 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆழியாறு பூங்கா அருகே, கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்குள்ள பூங்கா மற்றும் கவியருவிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆழியாறு பூங்கா அருகே உள்ள நாகராஜ் என்பவரது கடையில் உள்ள ப்ரீட்ஜ்க்கு அடியில் சாரைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையால் நியமிக்கப்பட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த சுரேஷ், சம்பவ இடத்துக்கு சென்று, ஐந்தடி நீளம் உள்ள சாரைப்பாம்பை மீட்டார். அதன்பின், அடர்ந்த வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

