/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விலை உயர்வு எதிர்பார்த்து கொப்பரை இருப்பு வைப்பு
/
விலை உயர்வு எதிர்பார்த்து கொப்பரை இருப்பு வைப்பு
ADDED : பிப் 22, 2024 05:15 AM
நெகமம்: நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை சாகுபடி அதிகமுள்ளது. இங்குள்ள விவசாயிகள், விளை பொருட்களான தேங்காய், கொப்பரை போன்றவைகளை நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.
இதில், ஆதார விலை திட்டத்தில் கொப்பரையை விற்பனை செய்தனர். அந்த திட்டம் நடப்பாண்டில் இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில், 'இ - நாம்' திட்டம் மற்றும் பண்ணை வயல் வாயிலாக, ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.
தற்போது, முதல் தர கொப்பரை, ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், விலை உயர்வை எதிர்பார்த்து, விவசாயிகள் கொப்பரையை இருப்பு வைத்துள்ளனர்.
விற்பனை கூடத்தில் தற்போது, 26 விவசாயிகள், 349 டன் கொப்பரையை இருப்பு வைத்துள்ளனர். இத்தகவலை நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.