/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு வினியோக ஊழியர்களுக்கு ஓய்வறை; இரு இடங்களில் தயார்
/
உணவு வினியோக ஊழியர்களுக்கு ஓய்வறை; இரு இடங்களில் தயார்
உணவு வினியோக ஊழியர்களுக்கு ஓய்வறை; இரு இடங்களில் தயார்
உணவு வினியோக ஊழியர்களுக்கு ஓய்வறை; இரு இடங்களில் தயார்
ADDED : நவ 01, 2025 05:28 AM

கோவை: வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்களுக்கு, கோவையில் 2 இடங்களில் ஓய்வறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு, தொழிலாளர்கள் நலத்துறை சார்பில் சட்டசபையில் வெளியிடப்பட்டது. கோவையில் முதல்கட்டமாக, ரூ.24 லட்சத்தில் ஆர்.எஸ்.புரத்திலும், ரூ.16.82 லட்சத்தில் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், ஓய்வு கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன .
இருக்கை மற்றும் டேபிள், மின் விசிறி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வாட்டர் கூலர், வாஷ் பேசின் மற்றும் கழிப்பறை வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஓய்வு கூடத்தில் ஏ.சி. வசதி ஏற் படுத்தப்பட்டுள்ளது.
காந்திபுரம் ஓய்வு கூடத்தை, கோவை எம்.பி. ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர். கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி, தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் பாலதண்டாயுதம், சுபாஷ் சந்திரபோஸ், தலைமை பொறியாளர் விஜயகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், மண்டலத்துக்கு ஒன்று வீதம் மேலும் ஐந்து இடங்களில் அமைக்கப்படுகிறது. பராமரிக்கும் பொறுப்பை ஏற்க, 'அமேசான்' நிறுவனம் முன் வந்துள்ளது.

