/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய்த்துறையினர் போராட்டம் துவங்கியது; அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின

ADDED : செப் 03, 2025 11:17 PM

கோவை; தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில், காலியாக உள்ள, 564 உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே நடத்துதல், உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள், 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று துவக்கினர்.
கோவை கலெக்டர் அலுவலகம், 11 தாலுகா அலுவலகங்கள், இரண்டு ஆர்.டி.ஓ. அலு வலகங்கள், நில அளவைத்துறை அலுவலகங்களுக்கு அலுவலர்கள் வரவில்லை. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால், பணிகள் நடக்கவில்லை.
590 வருவாய்த்துறை பணியாளர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து, அனைத்து பணிகளையும் புறக்கணித்தனர். ஜாதிச்சான்று, வருவாய், நிலஅளவை, பட்டா வழங்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாமல், மக்கள் சிரமத்துக்குள்ளாயினர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை பொது செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ''தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மாநில தலைமை முடிவு செய்யும்,'' என்றார்.