/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
ADDED : நவ 28, 2024 05:50 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தினால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சப் - கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கூறுகையில், 'கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்ச வரம்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும். வருவாய்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கப்பட எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,' என்றனர்.
உடுமலையிலும், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.