/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமேஸ்வரம் - கோவை ரயில் காலஅட்டவணையில் திருத்தம்
/
ராமேஸ்வரம் - கோவை ரயில் காலஅட்டவணையில் திருத்தம்
ADDED : மே 13, 2025 01:16 AM
கோவை, ; ராமேஸ்வரம் - கோவை இடையேயான ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை - ராமேஸ்வரம்(16618) மற்றும் ராமேஸ்வரம் - கோவை(16617) இடையே வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராமேஸ்வரம் - கோவை இடையேயான ரயிலின் கால அட்டவணை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து, இரவு 7:30 மணிக்கு பதில், இரவு 7:55 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, இரவு 7:54 மணிக்கு பதில், இரவு 8:20 மணி, ராமநாதபுரத்துக்கு இரவு 8:20 மணிக்கு பதில், இரவு 8:43மணி, காரைக்குடிக்கு இரவு 10:33 மணிக்கு பதில் இரவு 10:53 மணி, புதுக்கோட்டைக்கு இரவு 9:03 மணிக்கு பதில், இரவு 9:33 மணிக்கும் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.