/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ததும்பும் தடுப்பணைகள் ஊற்றெடுக்கும் கிணறுகள்; ஒரு வார மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : அக் 28, 2024 05:40 AM
மேட்டுப்பாளையம்: கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால், மேட்டுப்பாளையம் தாலுகாவில் தடுப்பணைகள் நிரம்பி வழிந்து, கிணறுகளில் நீர் ஊற்று அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய இரண்டு நகராட்சிகளும், சிறுமுகை பேரூராட்சியும், காரமடை ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளும் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் மொத்தமாக, 50க்கும் மேற்பட்ட சிறியதும், பெரியதுமான தடுப்பணைகள் உள்ளன. மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி ஆறு ஓடினாலும், ஆற்றுப் பாசனமோ, வாய்க்கால் பாசனமோ ஏதும் இல்லை. அதனால் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், கிணறு மற்றும் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி, விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், ஊராட்சிகளில் உள்ள அனைத்து தடுப்பணைகளும், வெள்ளியங்காடு குட்டையும், பெள்ளாதி குளமும் நிரம்பி உள்ளது. மேலும் பள்ளங்கள், நீரோடைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, கிணறுகளில் நீரூற்றும் அதிகரித்துள்ளன. கிணறுகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.