ADDED : பிப் 11, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; கவுண்டம்பாளையத்தில் நகை கடையில் ஒரு பவுன் தங்க மோதிரம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையத்தில் மாதாஜி தங்க நகை கடை உரிமையாளர் மோகன்லால், 49. இவருடைய மகன் கடையில் இருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர் தங்க மோதிரம் எடுப்பதாக கூறி, கடைக்குள் நுழைந்து ஒரு பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

