/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் பதித்த சாலையை சீரமைக்காததால் விபத்து அபாயம்
/
குழாய் பதித்த சாலையை சீரமைக்காததால் விபத்து அபாயம்
குழாய் பதித்த சாலையை சீரமைக்காததால் விபத்து அபாயம்
குழாய் பதித்த சாலையை சீரமைக்காததால் விபத்து அபாயம்
ADDED : அக் 06, 2025 11:36 PM
மேட்டுப்பாளையம்:சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. அம்ருத் குடிநீர் திட்டத்துக்கு பேரூராட்சியில் உள்ள, சாலைகளின் மையப் பகுதியில் குழி தோண்டி குழாய் பதித்தனர். குழாய்கள் பதித்து ஓராண்டாகியும் இன்னும் சாலையின் மையப் பகுதியில் சாலை சீரமைக்காமல் உள்ளது. இதனால் பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து சிறுமுகை மூலத்துறை பொதுமக்கள் கூறியதாவது:
சாலையின் இரண்டு பக்கம் தார் சாலையும், மையப் பகுதியில் குழாய் பதித்த இடத்தில், மண்சாலை இருப்பதால், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வாகனங்களில் வரும் பொது மக்கள், பலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சாலையை சீரமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பேரூராட்சி அதிகாரிகள், இந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டதால், அவர்கள் தான் சாலையை சீர் செய்து வேண்டும் என கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' சாலைகளை சீரமைக்க, டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டாக சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறும். நவம்பர் மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்,' என்றனர்.