/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு ஊராட்சிகளுக்கு நாளை சிறப்பு முகாம்
/
நான்கு ஊராட்சிகளுக்கு நாளை சிறப்பு முகாம்
ADDED : அக் 06, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:நான்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறுகிறது.
பசூர், கஞ்சப்பள்ளி, அல்லப்பாளையம், அ மேட்டுப்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வருகிற 8ம் தேதி காலை 9:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை, ஊத்துப்பாளையம் வேலன் மகாலில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஊரக வளர்ச்சி துறை, 17 துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்பார்கள்.