/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒய்.எம்.சி.ஏ., டிராபியை வென்ற ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணிகள்
/
ஒய்.எம்.சி.ஏ., டிராபியை வென்ற ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணிகள்
ஒய்.எம்.சி.ஏ., டிராபியை வென்ற ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணிகள்
ஒய்.எம்.சி.ஏ., டிராபியை வென்ற ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணிகள்
ADDED : ஜூலை 08, 2025 12:27 AM
கோவை; ஒய்.எம்.சி.ஏ., டிராபி போட்டியில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணிகள், இரு பிரிவுகளில் முதல் பரிசுகளை வென்றுள்ளன.
கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில், 69வது ஒய்.எம்.சி.ஏ., வெங்கடகிருஷ்ணன் டிராபி போட்டி நடந்தது.
மாவட்ட அளவிலான இப்போட்டியில், மினி பாய்ஸ், மினி கேர்ள்ஸ், ஜூனியர் பாய்ஸ், மென் ஆகிய பிரிவுகளில், 59 அணிகள் பங்கேற்றன.
'மினி கேர்ள்ஸ்' இறுதிப்போட்டியில், எஸ்.வி.ஜி.வி.,-ஏ அணி, 50-29 என்ற புள்ளிகளில் அல்வெர்னியா பள்ளியை வென்று, முதல் பரிசை தட்டியது. 'மினி பாய்ஸ்' பிரிவில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,-ஏ அணி, 63-25 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணியும், குமரகுரு அணியும் மோதின. ஆரம்பம் முதலே புள்ளிகளை குவித்த, ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணியினர், 90-58 என்ற புள்ளிகளில் வென்று, முதல் பரிசை தட்டினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.