/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் எதிர்ப்பால் சாலை அமைக்கும் பணி நிறுத்தம்
/
மக்கள் எதிர்ப்பால் சாலை அமைக்கும் பணி நிறுத்தம்
ADDED : மார் 16, 2024 11:50 PM
அன்னூர்:நாகமாபுதூரில் ஆக்கிரமிப்பு அகற்றாமல், சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அன்னூர் பேரூராட்சியில், அவிநாசி சாலையில், நாகமாபுதூர், பெரிய பாலத்திற்கு முன்னதாக தென்வடலாக பாதை உள்ளது. இந்தப் பாதையில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, பணி உத்தரவு வழங்கப்பட்டது.
இதையடுத்து, சாலை அமைக்கும் பணி துவங்கியது. அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழித்தடத்தில், கழிவு நீர் வடிகால் அமைக்கப்படவில்லை.
ஒருபுறம் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. மறுபுறம் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
எனவே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும். அதன் பிறகு புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

