/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் ரோடு சேதம்; 19 வார்டில் அவலம் சீரமைப்பு பணியில் மாநகராட்சி மும்முரம்

ADDED : ஏப் 05, 2025 11:23 PM
கோவை: கோவையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள், மழையால் சேறும் சகதியுமாக மாறியிருக்கின்றன.
துடியலுார், வெள்ளக்கிணறு, சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதியிலும், கணபதி, மணியகாரன்பாளையம், கணபதி மாநகர், காந்தி மாநகர், ஒண்டிபுதுார் ஆகிய இடங்களில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்படுகிறது.
பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் மற்றும் பகிர்மான குழாய் பதிக்கப்படுகின்றன. இம்மூன்று திட்டங்களுக்காக, தோண்டப்பட்ட ரோடுகள் படுமோசமாக காணப்படுகின்றன.
மழை காரணமாக, 1, 3, 4, 5, 10, 13, 14, 15, 17, 19, 34, 38, 39, 40, 42, 44, 56, 57, 69 ஆகிய, 19 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், சேறும் சகதியுமாக காணப்படுவதால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மழை பெய்தால் சாலைகள் சகதியாகி விடுவதால், வாகனங்களிலும் செல்ல முடிவதில்லை; நடந்து செல்வதற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது.