/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.75 லட்சம் செலவில் சாலை சந்திப்பு மேம்பாடு
/
ரூ.75 லட்சம் செலவில் சாலை சந்திப்பு மேம்பாடு
ADDED : செப் 25, 2024 08:39 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, வடசித்துாரில், 75 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொண்ட சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.
கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட, வடசித்துார் கிராமத்தை சுற்றியுள்ள செட்டிபாளையம் மற்றும் இதர பகுதிகளில் எண்ணற்ற கல்குவாரிகள் செயல்படுகின்றன.
கல்குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் மற்றும் செயற்கை மணல் ஆகிய பொருட்கள், வடசித்துாரின் அருகே உள்ள ரோட்டின் வழியாக கனரக வாகனங்களில் திருப்பூர், பொள்ளாச்சி, கோவை மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இதனால், வடசித்துாரை சுற்றியுள்ள ரோட்டில் பெருமளவு போக்குவரத்து காணப்படுகிறது. வடசித்துாரில் இருந்து, செட்டிபாளையம், கிணத்துக்கடவு, காட்டம்பட்டி, செஞ்சேரிமலை செல்லும் ரோடு என, நான்கு ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியை, சாலை பாதுகாப்பு நிதியின் கீழ், 75 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டது.
ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, ரவுண்டானா மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் முக்கோண தீவுகள் அமைக்கப்பட்டு, புல்வெளி தரைஅமைக்கப்பட்டுள்ளது.

