/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மதிய உணவு நேரத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் நடந்தது.
சங்க நிர்வாகி சண்முகம் தலைமை வகித்தார். நிர்வாகி கருணாகரன் வரவேற்றார். நிர்வாகிகள் முருகன், சாம்பமூர்த்தி பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்ததை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

