/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.42 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
/
ரூ.1.42 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 19, 2025 07:28 AM
கோவை : மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, மாநகராட்சி, 20வது மற்றும், 30வது வார்டுகளுக்கு உட்பட்ட சங்கனுார் பிரதான சாலைகள், பாரதி நகர் சாலைகள் என, 16 சாலைகள் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகின்றன.
அதேபோல், கிழக்கு மண்டலம், 6வது வார்டு, கருப்பராயன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையமும் நேற்று திறக்கப்பட்டது.
சாலை பணிகள் நேற்று துவங்கப்பட்ட நிலையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.