/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : டிச 07, 2024 06:22 AM
போத்தனூர்; கோவை, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையின் துவக்கத்தில், போத்தனூர் ரயில் பயணர்கள் சங்கம், போத்தனூர் தபால் நிலையம் மற்றும் போத்தனூர் போக்குவரத்து போலீசார் இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தினர்.
அதில், ஹெல்மெட் அணிவது, மொபைல்போன் பேசுவதை தவிர்த்தல், சீட் பெல்ட் அணிவது, லைசென்ஸ் பெற்ற பின்னரே வாகனத்தை ஓட்டவேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கோவை கிளை முதுநிலை மேலாளர் பூபாலன், விபத்து காப்பீடு குறித்த விபரங்களை விளக்கினார்.
போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,கள் சண்முகம், உதயகுமார், கணேசன், அருள், போஸ்ட் மாஸ்டர் அசோக்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரயில் பயணர்கள் சங்க பொது செயலாளர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.