/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லாங்குழியாக மாறிய ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
/
பல்லாங்குழியாக மாறிய ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 23, 2025 09:28 PM

சூலுார்; சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது போகம் பட்டி ஊராட்சி. இங்கிருந்து, திம்மநாயக்கன் பாளையத்துக்கு செல்லும் ரோடு, பல இடங்களில் மேடு, பள்ளமாக உள்ளதால், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து போகம்பட்டி மக்கள் கூறியதாவது:
போகம் பட்டியில் இருந்து திம்மநாயக்கன் பாளையம் செல்லும் ரோடு, இரண்டு கி.மீ., தூரமுள்ளது. மழை நீர் தேங்குவதால், இந்த ரோடு பல இடங்களில் மேடு பள்ளமாக மாறியுள்ளது. அதில் கன ரக வாகனங்கள் சென்றதால், பள்ளம் பெரிதாகி விட்டது. இதனால், இரு சக்கர வாகனங்களை கூட இயக்க முடியாமல் அவதிப்பட வேண்டி உள்ளது. சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் ரோட்டை சீரமைக்கவில்லை. உள்ளூர் இளைஞர்கள் இணைந்து, மண்ணை கொட்டி ரோட்டை சமன்படுத்தியுள்ளனர். அனைத்து ரோடுகளும் இதேபோல் சேதமடைந்துள்ளது. விரைந்து ரோடுகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.