/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு அகலப்படுத்தும் பணி; ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆய்வு
/
ரோடு அகலப்படுத்தும் பணி; ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆய்வு
ரோடு அகலப்படுத்தும் பணி; ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆய்வு
ரோடு அகலப்படுத்தும் பணி; ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆய்வு
ADDED : மே 14, 2025 11:49 PM
சூலுார்; பாப்பம்பட்டியில் ரோடு விரிவாக்க பணியை, நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், 2024--25 சாலை பாதுகாப்பு பணிகளின் கீழ், பல்லடம் - கொச்சின் மாநில நெடுஞ்சாலையில் பாப்பம்பட்டி நால் ரோட்டில் விரிவாக்க பணி நடக்கிறது. 2 கோடியே, 62 லட்சம் ரூபாய் செலவில் நடக்கும் பணியினை, நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார்.
பணிக்கு பயன்படுத்தப்படும் ஜல்லி கற்கள், அவற்றின் தரம், அளவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். பணிகளை தரமாக, விரைந்து முடித்திட, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவண செல்லம், தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் சித்ரா, உதவி கோட்ட பொறியாளர்கள் உடன் இருந்தனர்.