/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும், குழியுமான ரோடுகள்; சீரமைக்க பா.ஜ., வலியுறுத்தல்
/
குண்டும், குழியுமான ரோடுகள்; சீரமைக்க பா.ஜ., வலியுறுத்தல்
குண்டும், குழியுமான ரோடுகள்; சீரமைக்க பா.ஜ., வலியுறுத்தல்
குண்டும், குழியுமான ரோடுகள்; சீரமைக்க பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2025 10:14 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில், பா.ஜ., நகர தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகரில், பல இடங்களில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. நிறைய இடங்களில் ரோடுகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தறபோது மழை காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிக சொத்து வரி வசூலிக்கும் பொள்ளாச்சி நகராட்சி, ரோடுகள் பராமரிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை.மேலும், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் சேதமடைந்து வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துகிறது. இதனால், வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், வாகன ஓட்டுநர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி உள்ளிட்ட உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றன.பழைய ரோடுகளின் மீதே புதிய ரோடுகள் போடப்படுவதால் வீடுகள், கடைகள் சாலை மட்டத்துக்கு கீழே சென்று விடுவதால், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் பாதிக்கின்றனர்.
எனவே, ரோடுகள் முறையாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.