/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியர் வீட்டில் 38.5 பவுன் கொள்ளை
/
பேராசிரியர் வீட்டில் 38.5 பவுன் கொள்ளை
ADDED : மார் 11, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தனியார் கல்லுாரி பேராசிரியர் வீட்டில், 38.5 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை உப்பிலிபாளையம், விவேகானந்தா நகரை சேர்ந்தவர் மோகன்குமார், 53. தனியார் கல்லுாரி பேராசிரியர்.
இவர் கடந்த, 8ம் தேதி கவுண்டம்பாளையத்தில் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றார்.
மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த, 38.5 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

