ADDED : அக் 05, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம் கள்ளிப்பட்டி பிரிவு தனியார் தோட்டத்தில் கடந்த ஜூனில்,10 சேவல்கள் திருடு போனது. இதுகுறித்து நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரின் பேரில், வழக்குப்பதிந்து, திருடிய நபர்களை தேடி வந்தனர்.
நேற்று போலீசார் காட்டம்பட்டி அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பவானிசாகரைச்சேர்ந்த நகுலேஸ்வரன் 19, செல்வன் 21, விஜயராஜ் 21 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இவர்கள் இத்திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களில் மூன்று நபர்களை கைது செய்து பொள்ளாச்சி சப் ஜெயிலிலும், 17 வயதுடைய சிறுவனை கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர்.