/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலம்புழா பூங்காவில் 'ரோப்வே' இயங்காது
/
மலம்புழா பூங்காவில் 'ரோப்வே' இயங்காது
ADDED : பிப் 25, 2024 12:46 AM
பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள மலம்புழா பூங்காவில், பராமரிப்பு பணிக்காக ஐந்து நாட்களுக்கு ரோப்வே இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பூங்கா உள்ளது.
இங்கு சுற்றுலா பயணியரை கவரும் வகையில், அணையின் அருகே பூங்கா, படகு சவாரி, வண்ணமீன் காட்சியகம் போன்றவை உள்ளன. குறிப்பாக, பூங்காவை கழுகு பார்வையில் காணும் வகையில், ரோப்வே இயக்கப்படுகிறது.
இதில், பயணித்து பூங்காவின் அழகை ரசிக்க சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர். கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணியர் மலம்புழா வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்டு பராமரிப்பு பணிக்காக, நாளை (26ம் தேதி) முதல், மார்ச் 1ம் தேதி வரை ரோப்வே இயங்காது என்று, மேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.